கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.*** தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;*** பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;*** நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைபண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.***

Tuesday, 7 June 2011

உலகினில் தீமை தோன்றியது எப்படி? அதிலிருந்து நாம் விடுபடுவது எப்படி? - 02


நாம் மிருகங்களைவிட அறிவுக்கூர்மையும் கல்வி கற்றவர்களாயும் இருப்பதினிமித்தம் மிருகங்களைக் காட்டிலும் நம்மை மேலானவர்களாகக் கருதிவிட முடியாது! ஏனெனில் புத்திக்கூர்மையான கல்வி கற்ற மனிதர்கள், இன்னமும் பேராசைக்கும், சுயநலத்திற்கும், இச்சைக்கும், கோபத்திற்கும் அடிமையாகத்தான் இருக்கின்றார்கள்.

நம் மனதைக் காட்டிலும் ஆழமான ஒரு பகுதி நமக்குள் அடங்கி இருக்கிறது. அது நமக்குள் இருக்கும் ஆவி! நம்முடைய ‘ஆவியே’ தேவனைக் குறித்த உணர்வை நமக்குத் தருகிறது. இந்த உணர்வு எந்த ஒரு மிருகத்திற்கும் இல்லை.

சுயதீனமாய் தெரிந்துக்கொள்ளும் சுதந்திரத்தினிமித்தம் ஏற்படும் அபாயம் யாதெனில், இந்த சுதந்திரத்தை வைத்து நம்மை நாமே பிரியப்படுத்துவதற்கும், தேவனுடைய பிரமாணங்களுக்கு கீழ்படியாமல் இருப்பதற்கும் பயன்படுத்திவிட முடியும். இவ்வாறு இருந்த போதும் தேவன் இந்த விபரீதத்தைச் சந்திக்கத் தயாராயிருந்தார். ஏனென்றால், தேவனாகிய தன்னை சுயாதீனமாய் தெரிந்துகொள்ளும் பிள்ளைகளையே அவர் விரும்புகின்றார்.

தேவன் சிருஷ்டித்த முதல் மனுஶனும் மனுஶியும் ஆதாம் என்றும் ஏவாள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் சிருஶ்டிக்கப்பட்டபோது "களங்கம் அற்றவர்களாகவே" இருந்தார்கள். ஆனால் அவர்கள் பரிசுத்தமாய் இருப்பகற்கோ, அதை அவர்கள் தாங்களாகவே தெரிந்துக்கொள்ள வேண்டும்! இந்தத் தெரிந்துகொள்ளுதல் ஏற்படுவதற்காகத்தான் அவர்கள் சோதிக்கப்பட வேண்டியிருந்தது. ஏனெனில் அப்போது மாத்திரமே அவர்கள் ‘தீமையை மறுத்து’ தேவனைத் தெரிந்துகொள்ள முடியும். இதற்காகவே சாத்தான் அவர்களிடம் வந்து, அவர்களைச் சோதிப்பதற்கு தேவன் அனுமதித்தார்! இந்த நிகழ்ச்சியை வேதாகமத்தின் முதலாவது புத்தகமாகிய ஆதியாகமம் 2,3 அதிகாரங்களில் வாசிக்கிறோம்.

முதல் மனுஷனையும் மனுஷியையும் தேவன் சிருஷ்டித்தபோது, அவர்களை அவர் ஒரு தோட்டத்தில் வைத்து, ஒரே ஒரு மரத்தின் கனியைத் தவிர எல்லா மரத்தின் கனிகளையும் புசிக்கலாம் என தேவன் கூறினார். இதுவே அவர்களுக்குத் தரப்பட்ட தெரிந்துகொள்ளுதலின் பரீட்சையாக இருந்தது! இவ்வளவு மிக எளிய கீழ்ப்படிதலின் பரீட்சையில் ஆதாமும், ஏவாளும் தோல்வி அடைந்தார்கள்! எப்படியெனில், சாத்தான் அவர்கள் தோட்டத்திற்குள் பிரவேசித்து ஆதாமையும் ஏவாளையும் பார்த்து, "நீங்கள் இவ்விலக்கப்பட்ட கனியைப் புசிக்கும் நாளில் தேவனைப்போல் ஆகிவிடலாம்" எனக் கூறி சோதித்தான். அவ்வேளையில் ஆதாமும் ஏவாளும் சந்தித்த சோதனை, "ஏதோ ஒரு மரத்தின் கனியை புசிப்பதுதானே!" என்ற மிக எளிய சாதாரண விஷயமாய் இருக்காமல், "அவர்கள் விரும்பினால் தேவனைப்போல் மாறிவிடலாம்" என்பதான விபரீதமாய் இருந்தது!
ஒரு காலத்தில் ‘சாத்தான்’ இதுபோன்ற விருப்பத்தையே கொண்டிருந்தான். அந்த விருப்பத்தைத்தான் அவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் விஷம் பாய்ச்சிவிட்டான். இவர்கள் தேவனுக்குக் கீழ்படியாமல் போனதால், அன்று சாத்தான் அடைந்த அதே கதியை அடைந்தார்கள். ஆம், இவர்களும் தேவனுடைய சமூகத்தை விட்டு துரத்தப்பட்டார்கள்.

மேற்சொல்லப்பட்ட எல்லா நிகழ்ச்சிகளையும் பரிசுத்த வேதாகமத்தின் முதல் புத்தகமாகிய ஆதியாகமம் 3-ம் அதிகாரத்தில் நாம் தெளிவாக வாசித்தறியலாம்.

மனுவர்க்கத்திற்குள் எவ்வாறு பாவம் தோன்றியது என்பதை இப்போது நாம் தெளிவாக வாசித்தறியலாம்.

தேவனுக்கு மேலாக, நமக்கானவைகளையும் சிருஶ்டிக்கப்பட்டவைகளையும் தெரிந்துகொள்வதே எல்லாப் பாவத்திற்கும் வேராய் இருக்கிறது. அதாவது, தேவனுடைய வழிக்குப் பதிலாக நம் சொந்த வழியைத் தெரிந்துகொள்வதும், தேவனைப் பிரியப்படுத்துவதற்குப் பதிலாக நம்மை நாமே பிரியப்படுத்துவதுமாகும்.

விபச்சாரம் அல்லது கொலை அல்லது திருடுதல் போன்றவைகளைச் செய்வது மாத்திரம் பாவமாகாது. ஆம், பாவத்தின் சரியான விளக்கம் "நாம் நம்முடைய சொந்த வழியை விரும்புவதேயாகும்." பாவம் துவங்குவதை ஒரு சிறு பிள்ளையின் முரட்டாட்டத்திலிருந்து நாம் காண்கிறோம். அந்தப் பிள்ளை வளரும்போது தன் சொந்த வழியில் செல்லவே தீர்மானித்து... தான் விரும்பியதையெல்லாம் மற்ற பிள்ளைகளிடமிருந்து பறிக்கவும் சண்டையிடவும் செய்கிறது.

பாவம் நம் ஒவ்வொரு நாடி நரம்புகளிலும் ஊடுறுவப் பாய்ந்திருக்கிறது. இப்பாவத்தை மார்க்க அனுசாரங்களைப் போன்ற உபவாசம் மற்றும் ஜெபங்களின் மூலமோ அல்லது புனிதயாத்திரையின் மூலமோ அல்லது சுயக்கட்டுப்பாட்டின் மூலமோ போக்கிவிட ஒருக்காலமும் முடியாது! தேவன் ஒருவரே நம்மை பாவத்திலிருந்து இரட்சிக்க முடியும்.

ஆனால், "பாவம் இத்தனை தீமையானது" என நாம் உணரும்வரை தேவன் காத்திருக்க வேண்டியதாயிருக்கிறது. யாரெல்லாம் தங்களை நீதிமான்களாகக் கருதுகிறார்களோ அவர்களைத் தான் இரட்சிக்க முடியாது என்ற உண்மையை இயேசு தெளிவுபடுத்தினார். தாங்கள் நோயாளிகள் என்பதை அறிந்தவர்கள் மாத்திரமே ஒரு மருத்துவரிடம் செல்லுவார்கள். இதற்கொப்பாக "நாம் பாவிகள்" என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வதே நம்முடைய முதல் தேவையாயும் இருக்கிறது.

நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய பரிசுத்த பிரமாணங்களை நம்முடைய சிந்தையிலும், வார்த்தையிலும், செயலிலும், மனநோக்கங்களிலும் மீறி பாவம் செய்திருக்கிறோம். ஆம், நாம் தேவனுடைய பரிசுத்த தரத்திலிருந்து வீழ்ச்சி அடைந்துவிட்டோம்.

பாவம் நம்முடைய "ஆத்துமாவிற்கு" அழிவைத் தருகிறபடியால் அந்த அழிவை வெளிப்படையாய் காணமுடிவதில்லை, அவ்வளவுதான். பாவத்தினால் ஏற்படும் விளைவுகள் நம் ஜீவியத்தை நாசம் செய்து இப்பூமியில் நம்மை மகிழ்ச்சியற்றவர்களாகச் செய்கிறது.


இக்கொடிய பாவத்திலிருந்து நாம் இரட்சிக்கப்படாத பட்சத்தில் பாவம் நம்மை முடிவில் நித்தியத்திலும் அழித்துவிடுகிறது.



- - - தொடரும்

Sunday, 5 June 2011

பாடல் - ஆனந்த துதி ஒலி கேட்கும்

உலகினில் தீமை தோன்றியது எப்படி? அதிலிருந்து நாம் விடுபடுவது எப்படி? - 01


சகல ஞானத்தினாலும் நன்மையினாலும் நிறைந்த தேவன் சிருஷ்டித்த இவ்வுலகில், எவ்வாறு தீமை தோன்றியது? ஒரு இடம்கூட பாக்கி இல்லாமல் எங்கு பார்த்தாலும் வியாதியும், தரித்திரமும், வருத்தமும், துன்பமும் நிறைந்திருப்பதற்கு காரணமென்ன? இந்நிலையில் உள்ள நமக்கு உதவி செய்ய தேவன் ஆர்வமற்று இருக்கிறாரா? இக்கேள்விகளுக்கெல்லாம் நிச்சயமாய் ஓர் பதில் தேவையாயிருக்கிறது.

பரிசுத்த வேதாகமம் இந்த பதிலை நமக்குத்தருகிறது! இந்த பதிலை நாம் காண்பதற்கு முன்பாக, தேவனைப்பற்றிய சில உண்மைகளில் நாம் தெளிவடைவது நல்லது. 

பரிசுத்த வேதாகமத்தின் முதல் வசனமே, "ஆதியிலே தேவன்..." என்றே துவங்குகிறது (ஆதி.1:1) தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்தில் உள்ள புத்தகங்களில் ஆதியாகமமே முதல் புத்தகம்! நீங்கள் வாசிக்கும் இச்சிறிய புத்தகத்தில், 

பரிசுத்த வேதாகமம் தேவனைக் குறித்த உண்மையை, அவர் எப்படி நித்திய காலத்திற்கு முன்பாகவே இருக்கிறார் என்பதை விளக்கிக்கூற முற்படாமல், அதை ‘அப்படியே ஏற்றுக்கொள்ளும்’ உண்மையாகவே மிக எளிதாய் நமக்குச் சொல்லுகிறது.

மானிடராகிய நம்மிடம் தனிப்பட்ட விதத்தில் உறவு கொள்ள விரும்பும் ஒருவராகவே வேதாகமம் தேவனை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறது. மனுஶீக ஆள்த்துவங்களைப் போலவே தேவனும் ஓர் மானிடனைப் போல் இருப்பார் என நாம் ஒருக்காலும் எண்ணக்கூடாது. அவர் ஆவியாயிருக்கிறார்; எல்லா விதத்திலும் அவர் முடிவற்ற தன்மை கொண்டவர்; குணாதிசயத்தில் எக்காலத்தும் மாறாதவர்! அவர், சர்வ வல்லமை கொண்டவர்; சர்வமும் அறிந்தவர்; அளவிற்கடங்கா ஞானம் நிறைந்தவர்; எல்லாயில்லா அன்பு நிறைந்தவர்; எல்லையில்லா தூய்மை நிறைந்தவர்!!

தேவனின் எல்லையில்லா அன்பில் சுயநலம் என்பது முற்றிலுமாய் இல்லவே இல்லை. ஆகவேதான் அவர் தன்னுடைய மகிழ்ச்சியையும் சந்தோஶத்தையும் பிறருக்கு பகிர்ந்து கொடுத்திட விரும்புகிறார். இதற்காகவே அவர் ஜீவராசிகளை சிருஶ்டித்தார். அந்த சிருஷ்ப்பில் எல்லாவற்றிற்கும் முதலாக, அவர் இலட்சக்கணக்கான தூதர்களை சிருஷ்டித்து, தன்னுடைய சந்தோஷதையும் அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார்.

இவ்வாறு தோன்றிய தூதர்கள் கூட்டத்திற்குத் தலைவனாக இருக்கும்படி தேவன் ஒரு தூதனை சிருஷத்தார். அவனுடைய பெயர் லூசிபர்!

தேவன் சிருஶ்டித்த வான மண்டல கிரகங்கள் அல்லது மரங்களைப் போல் அல்லாமல், லூசிபருக்கு மற்ற தூதர்களுக்கு "சுயாதீன- சித்தத்தைக்" கொடுத்து தேவன் சிருஶ்டித்தார். இந்த சுயாதீனத்தைப் பெற்ற தூதர்கள் அதைக்கொண்டு தேவனுக்குக் கீழ்படியவோ அல்லது கீழ்படியாமல் இருப்பதற்கோ தாங்களாகவே தெரிந்துகொள்ள முடியும்.

ஒருவன் ‘குணாதிசயம்’ கொண்டவனாக இருப்பதற்கு "சுயாதீன சித்தம்" என்ற தன்மை முதலாவது அடிப்படைத் தேவையாகும். கிரகங்களோ அல்லது மரங்களோ நன்மைசெய்யவும் முடியாது, தீமைசெய்யவும் முடியாது. ஏனென்றால் அவைகளுக்குத் தாங்களாகவே தெரிந்துக்கொள்ளும் சுயதீனம் இல்லாமல் சிருஶ்டிக்கப்பட்டபடியால், இவைகள் தேவனுடைய பிரமாணங்களுக்கு அப்படியே கீழ்படிந்துவிடுகின்றன. இதன் நிமித்தமே இவைகள் தேவனுடைய புத்திரர்களாகவும் இருந்திட முடியாது.

மனிதனையோ தேவன் தன்னுடைய சாயலில் சிருடித்தார். இதுவே நாம் அவருடைய பிள்ளைகளாய் மாறுவதற்குரிய சாத்தியத்தை நமக்கு வழிவகுக்கிறது. நாம் குணாதிசயம் கொண்டவர்கள் என்பதை நமக்குள் இருக்கும் மனசாட்சியின் சத்தம் நமக்கு நினைவூட்டுகிறது. மேலும் நாம் தேவனுடைய பிரமாணங்களை மீறும் பொழுதெல்லாம், இம்மனசாட்சியின் சத்தம் நம்மை உணர்த்துவிக்கிறதாயிருக்கிறது.

"சுயதீன சித்தம்" "மனசாட்சி" ஆகிய இந்த இரண்டையும் உடையவர்களாகவே தூதர்களும் சிருஷ்டிக்கப்பட்டார்கள்.

இவ்வொப்பற்ற தன்மை கொண்ட தூதர்களுக்குத்தான் லூசிபர் தலைவனாயிருந்தான். ஆனால் இவன் வெகு சீக்கிரத்தில் நல்லதற்ற லட்சியங்களையும் கொண்டிடத் துவங்கினான். இவ்வாறு இங்கிருந்து தான் இவ்வையகத்தில் தீமை முதலாவதாகத் தோன்றியது!

லூசிபரின் சிந்தைகள் நல்லதற்றதாக மாத்திரமல்லாமல், அவைகள் பெருமையின் சிந்தைகளாகவும், முரட்டாட்டத்தின் சிந்தைகளாகவும், அதிருப்தி கொண்ட சிந்தைகளாகவும் இருந்தது.

தீமை முதலாவதாக இருதயத்தில் தோன்றியது என்பதை நாம் நினைவிற்கொள்ளக் கடவோம். ஆரம்ப நிலையில் வெளித்தோற்றமான எவ்வித செயலும் நடைப்பெறவில்லை. அவ்விதமே இன்றும் தீமையானது இருதயத்தில் இருந்தே முளைத்தெழும்புகிறது. இவ்வுலகத்திற்கு தீமையைக் கொண்டுவந்த முதல் பாவம் "பெருமை" என்பதையும் நாம் நினைவிற்கொள்வோமாக!

இந்நிலையில் லூசிபரை தன் உடனடி சமூகத்தை விட்டு கீழே தேவன் தள்ளினார். அக்கணமே இந்த லூசிபர் "சாத்தான்" என அழைக்கப்பட்டான்!
லூசிபரையும் அவனோடு சேர்ந்து முரட்டாட்டம் செய்த தூதர்களையும் தேவன் கீழே தள்ளினார். வீழ்ச்சியடைந்த இந்த தூதர்களே "பொல்லாத ஆவிகள்" அல்லது "பிசாசுகள்" ஆவார்கள். இப்பொல்லாத ஆவிகளே இன்று ஜனங்களை அலைக்கழித்து துன்புறுத்துகின்றன!

ஒருவேளை,வாசிக்கும் நீங்கள் கூட பொல்லாத ஆவிகளினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அல்லது வேறு யாராவது உங்கள் மீது மாந்திரீகமான செய்வினை ஏவுதல் செய்திருக்கலாம். அவ்வாறு இருந்தால், உங்களுக்கென பரிசுத்த வேதாகமம் ஓர் நற்செய்தியை வைத்திருக்கிறது. இப்பொல்லாத ஆவிகளின் தொந்தரவிலிருந்து சம்பூரணமான விடுதலையை நீங்கள் நிரந்தரமாய்ப் பெற்றுக்கொள்ள முடியும். 

இத்தருணத்தில் சிலர், "இவ்வுலகத்தின் எல்லா தீமைகளுக்கும் சாத்தான்தான் காரணமென்றால், சாத்தானையும் எல்லா அசுத்த ஆவிகளையும் தேவன் ஏன் அழிக்காமல் வைத்திருக்கிறார்?" எனற கேள்வியை கேட்கக்கூடும்.

தேவன் விரும்பினால் சாத்தானை ஒரு நொடிப்பொழுதில் நிச்சயமாய் அழித்துவிட முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை! சாத்தானையும் அவனோடிருக்கும் பிசாசுகளையும் அனுமதித்து இருக்க வைத்திருப்பதில் ஓர் தெளிவான நோக்கத்தைத் தேவன் வைத்திருக்கிறார். அவ்வித அவருடைய நோக்கத்தின் ஒரு பகுதியாதெனில், இப்பூமிக்குரிய வாழ்க்கையை மனிதனுக்கு கடினமானதாகவும்; பாதுகாப்பற்றதாகவும்; அபாயம் நிறைந்ததாகவும் செய்வதற்கு சாத்தானையே தேவன் உபயோகப்படுத்துகிறார்.

அது ஏனென்றால் "இதன் மூலமாய்" ஜனங்கள் இப்பூமிக்குரிய சொகுசான வாழ்க்கையினால் ஈர்க்கப்பட்டுவிடாமல், தேவனிடத்தில் திரும்பவும், நித்திய வாழ்க்கையில் அக்கறை கொள்ளவும் செய்கிறார்!

காரியம் இவ்வாறு இருப்பதால், இவ்வுலகத்தில் நமக்கு ஏற்படும் துன்பங்கள், தேவன் நம்மீது கொண்ட அன்பின் சின்னமாகவே இருக்கிறது. இதுவே பரிசுத்த வேதாகமம் நமக்கு வழங்கும் செய்தியாகும்!

இதுபோன்ற உலகத்தில் காணும் தீமைகளைத் தேவன் உபயோகித்து அதன்மூலம் ஜனங்களை அவர்களின் பாவங்களிலிருந்து திரும்பும்படிச் செய்கிறார். இவ்வாறாகவே ஜனங்கள் பரலோகத்தில் உள்ள தங்கள் நித்திய வீட்டைக் கண்டுகொள்ளும்படி தேவன் நடத்துகிறார்!

ஆகவேதான், தேவன் இவ்வுலகத்தில் உள்ள எல்லா தீமைகளையும் மிக எளிதில் அகற்றிவிடக் கூடுமென்றாலும், அவர் அவ்விதமாய் செய்யவில்லை! ஏனென்றால் இத்தீமைகளின் மூலமாகவே தேவன் தம்முடைய மகிமையான நோக்கத்தை நிறைவேற்றி முடிக்கிறார்!!

- - - தொடரும்

Saturday, 4 June 2011

The LORD's Prayer Song




Our Father, which art in heaven
Hallowed be Thy name

Our Father, which art in heaven

Hallowed be Thy name


Thy kingdom come
Thy will be done
On earth as it is in heaven

Our Father, which art in heaven
Hallowed be Thy name
Hallowed be Thy name


Our father, which art in heaven  
Our father
Hallowed be thy name
Hallowed be thy name

Thy kingdom come
Thy will be done
On earth as it is in heaven

Give us this day
Our daily bread
And forgive us our debts
As we forgive our debtors

And lead us not into temptation
But deliver us, deliver us from evil

For Thine is the kingdom, and all the power
And the glory forever, amen

The LORD's Prayer


    "  பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
    உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
    எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
    எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
    எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே,
    ஆமென்.  "    
      மத்தேயு 6 : 9 - 13

    " Our Father which art in heaven, Hallowed be thy name.
    Thy kingdom come. Thy will be done in earth, as it is in heaven.
    Give us this day our daily bread.
    And forgive us our debts, as we forgive our debtors.
    And lead us not into temptation, but deliver us from evil: For thine is the kingdom, and the power, and the glory, for ever. 
    Amen. "               Mathew 6 : 9 - 13