கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.*** தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;*** பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;*** நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைபண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.*** பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.***

வலைமலர் பற்றி

அன்பு சகோதர சகோதரிகளே,

இந்த வலைமலர்
,
கிறிஸ்துவை அறிந்தவர்கள், அறியாதவர்கள்,
கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களுக்காகவும்,
கிறிஸ்து கிறிஸ்துவம் பற்றி ஆழமாய் அறிந்துகொள்ளவும்,
கிறிஸ்துவ விசுவாசத்தை பெருக்குவதற்கும், 
அநேக ஜனங்களுக்கு கிறிஸ்துவின் 
கிருபையும், இரக்கமும், தயவும் 
பெருகவும் உருவாக்கப்பட்டுள்ளது.