விசுவாச அறிக்கை
வானமும், பூமியும், அதிலுள்ள காணப்படுகிறவைகள், காணப்படாதவைகள் யாவும் தேவனால் உண்டானதென்றும், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாக திரியேக தேவனாக, ஒன்றான மெய் தேவனாக இருக்கிறார் என்றும், உலகினில் மாம்சமாக வந்த இயேசு கிறிஸ்து மெய்யான தேவ குமாரன் என்றும், நம்முடைய பாவங்கள் பாடுகள் பட்டு, சாபங்களுக்காக அடிக்கப்பட்டு, நோய்களுக்காக அடிக்கப்பட்டு, இரத்தம் சிந்தி சாத்தான்னின் சகல அதிகாரங்களையும் சிலுவையிலே வெற்றி சிறந்தார்.
பின்பு மரித்து மூன்றாம் உயிர்த்தெழுந்து, இப்பொழுது பரமண்டலத்திலிருக்கும் பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்து, நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் பரிசுத்த வேதாகமம் தேவனுடைய வார்த்தையென்றும், விசுவாசிக்கின்றோம்.
கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரும், மனந்திரும்பி பாவங்களை அறிக்கையிட்டு, புது சிருஷ்டியாகும்படியாகவும் கிறிஸ்துவுக்குள் வரும்படியாகவும் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்றும், கிறிஸ்துவின் திருவிருந்து பந்தியில் பங்கு பெற வேண்டும் என்றும் இறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது சரீர உயிர்த்தெழுதல் உண்டென்றும், நீதிமான்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்றும் விசுவாசிக்கின்றோம்.
சகல துதியும் கனமும் மகிமையும் ஆராதனையும் ஸ்தோத்திரங்களும் நன்றி பலிகளும், நம் மீட்பரும் இரட்சகருமான இயேசுவுக்கே உண்டாவதாக. ஆமென். அல்லேலுயா .